செய்தி விவரங்கள்

இந்தியா வீரரை சீண்டிய தென்னாபிரிக்கா வீரருக்கு அபராதம்!

இந்தியா வீரரை சீண்டிய தென்னாபிரிக்கா வீரருக்கு அபராதம்!


இந்தியாவுடனான  போட்டியில் விதிமீறிய தென்னாபிரிகாக வீரருக்கு ஊதியத்தில் 15 வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதும் 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் கடந்த 1 ஆம் திகதி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இப் போட்டியில் ஏற்கனவே நடைபெற்ற 5 போட்டிகளில் இந்தியா அணி 4 போட்டிகளிலும், தென்னாபிரிக்கா அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்று, இந்தியா அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் இறுதியாக நேற்று நடைபெற்ற 5 ஆவது ஒருநாள் போட்டியில் ரபாடா பந்து வீச்சில் இந்தியா வீரர் தவான் ஆட்டமிழந்துள்ளதை ஐ.சி.சி இன் விதிகளை மீறி ரபாடா வம்பிழுத்துள்ளார். இதனால் தென்னாபிரிக்கா வீரர் ரபாடாக்கு போட்டி சம்பளத்தில் 15 வீர அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே தென்னாபிரிக்கா வீரர்களுக்கு 10 வீத அபராதமும், அணித்தலைவர் மர்க்கிரமுக்கு 20 வீத அபராதமும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு