செய்தி விவரங்கள்

தோனியின் மனைவி செய்த இந்த செயலை கொஞ்சம் பாருங்க..!

இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது மேற்கிந்திய தீவுகளில் அணியுடனான கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒரு நாள் போட்டி மழையால் தடை பட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

ஐபில் போட்டியின் போது சென்னை அணியில் விளையாடிய மேற்கிந்திய வீரர் பிராவோ,இந்திய அணியின் முன்னாள் கேப்டன்  தோனி உள்ளிட வீரரர்களை தனது இல்லத்திற்கு அழைத்து விருந்தளித்திருந்தார்.

அந்த விருந்தில் பங்கேற்க இந்திய அணியின் வீரர்களுடன், அவரது  மனைவி குழந்தைகளும் சென்றிருந்தனர்.

அப்போது, தோனியின் மனைவி சாக்க்ஷி தோனி, பிராவோ மற்றும் இந்திய  வீரர் ஷிகார் தவான் குழந்தைகளுடன் புகைப்படமெடுத்து சமூகவலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். இப்புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. வேற்று அணியில் இருப்பினும் நட்பு உணர்வோடு இரு அணி வீரர்களும் பழகி வருவது பாராட்டத்தக்கது என கருத்து தெரிவிகின்றனர்  பொதுமக்கள்.

முன்னதாக, தோனியை தனது இல்லத்திற்கு அழைத்து விருந்து வைத்த  மேற்கிந்திய வீரர் பிராவோ இன்னோர் தாயின் வயிற்றில் பிறந்த என் சகோதரன் தோனி என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு