செய்தி விவரங்கள்

ராஜஸ்தான் ராஜல்ஸ் அணியின் ஆலோசகராக வார்னே நிஜமனம்!

ராஜஸ்தான் ராஜல்ஸ் அணியின் ஆலோசகராக வார்னே நிஜமனம்!


ராஜஸ்தான் ராஜல்ஸ் அணியின் ஆலோசகராக ஸேன் வார்னே நியமிக்கப்பட்டுள்ளார்.

11 ஆவது ஐ.பி.எல் போட்டிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரை நடைபெறவுள்ளது. இப் போட்டிகளில் பங்குபற்றவுள்ள அணிகளுக்கான வீரர்களை தெரிவு செய்யும் ஏலம் ஜனவரி மாதம் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் பெங்களுரில் இடம்பெற்றுள்ளது.

இதனடிப்படையில் தற்போது ஒவ்வொரு அணிகளுக்கு தேவையான வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு அணிகளுக்குமான பயிற்சியாளர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ராஜஸ்தான் ராஜல்ஸ் அணியின் ஆலோசகராக அவுஸ்ரேலியா அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும், ராஜஸ்தான் ராஜல்ஸ் அணியில் கடந்த 2008 முதல் 2011 ஆம் ஆண்டு வரை விளையாடிய வீரர் ஷேன் வார்னே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு