செய்தி விவரங்கள்

முத்தொடரில் இங்கிலாந்தை வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி!

முத்தொடரில் இங்கிலாந்தை வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி!


முத்தொடர் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா அணிகள் மோதும் முத்தொடர் போட்டிகள் கடந்த 3 ஆம் திகதி முதல் அவுஸ்ரேலியாவில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இப் போட்டியில் ஏற்கனவே நடைபெற்ற 3 போட்டகளிலும் அவுஸ்ரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்று ஆரம்பமான 4 ஆவது போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதியுள்ளன. இன்று ஆரம்பமான போட்டியில் முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 196 ஓட்டங்களை பெற்றுள்ளது.

முத்தொடரில் இங்கிலாந்தை வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி!

இதனை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 184 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 12 ஓட்டங்களால் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்துள்ளது. போட்டியில் ஆட்டநாயகனாக நியூசிலாந்து அணி சார்பில் 72 ஓட்டங்களை கூடுதலாக பெற்ற கனே வில்லியம்சன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு