செய்தி விவரங்கள்

நியுசிலாந்து பாக்கிஸ்தான் அணிகளுக்கான 3 ஆவது ஓடி போட்டி நாளை

நியுசிலாந்து பாக்கிஸ்தான் அணிகளுக்கான 3 ஆவது ஓடி போட்டி நாளை


பாக்கிஸ்தான் மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கான 3 ஆவது ஓடி போட்டி நாளை ஆரம்பமாகவுள்ளது.

பாக்கிஸ்தான் அணி நியுசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ள 5 போட்டிகள் கொண்ட ஓடி தொடரின் 3 ஆவது போட்டி நாளை டுனெடின் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. மேலும் நடைபெறவுள்ள ஓடி போட்டிகளை தொடர்ந்து, 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரிலும் பாக்கிஸ்தான் மற்றும் நியுசிலாந்து அணிகள் மோதவுள்ளன.

இந்நிலையில் கடந்த  ஜனவரி  6 ஆம் திகதி இடம்பெற்ற முதலாவது ஓடி போட்டியில் மழை காரணமாக நியுசிலாந்து அணி டி.எல்.எஸ் முறையில் 61 ஓட்டங்களால் பாக்கிஸ்தான் அணியை வென்றுள்ளது. அதனைத்தொடர்ந்து கடந்த ஜனவரி 9 ஆம் திகதி இடம்பெற்ற 2 ஆவது ஓடி போட்டியிலும் நியுசிலாந்து அணி மழை காரணமாக டி.எல்.எஸ் முறையில் 8 விக்கெட்டுக்களால் பாக்கிஸ்தான் அணியை வென்றுள்ளது. அதனைத்தொடர்ந்து நாளை 3 ஆவது ஓடி போட்டி நடைபெறவுள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு