செய்தி விவரங்கள்

பயிற்சியாளர் இல்லாவிட்டால் என்ன; நம்ம 'தல' தோனி போதுமே.!

தற்போது மேற்கிந்திய அணியுடனான 5 ஒருநாள் மற்றும் 1 20/20  தொடரில் விளையாடி வருகிறது இந்திய அணி. முன்னதாக ஐசிசி சாம்பியன் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் தனது பரம எதிரியான பாகிஸ்தான் அணி இடத்தில் பரிதாபகரமாக தோற்றது.

பாகிஸ்தானுடனான தோல்விக்கு பின் தனது பயிற்சி முறைகளில்,கோலிக்கு மாற்று கருத்து  உள்ளதாக கூறி பதவி  விலகினார் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கும்ப்ளே.

கும்ப்ளேவின் பதவி விலகல் இந்திய அணிக்கு பேரிழப்பு என குறிப்பிட்ட இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர். கோலி தனது பொறுப்பற்ற, சிறுபிள்ளைத்தனமான விட்டேந்தி  அணுகுமுறையினால் இந்திய  அணியின் ஜாம்பவான் கும்ப்ளேவை அவமதித்து விட்டாரென முன்னாள் வீரர்களும், பொதுமக்களும் தொடர்ச்சியாக கருத்துக்களை வெளியிட்ட வண்ணனமிருந்தனர்.

கோலியை கேப்டன் பதவியை விட்டு நீக்கி விட்டு, இந்திய அணி முன்னோக்கி நகர வேண்டுமெனவும், இந்திய அணியின் முன்னேற்றத்திற்கு தடையாக கோலி திகழ்வார்  என பொதுமக்கள்  அதிரடியான கருத்துக்களை  வெளியிட்டு வந்த நிலையில்,

இந்நிலையில் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் கூறுகையில், "அணியில் அனுபவம் மிக்க வீரர்களான தோனி, யுவராஜ் சிங் உள்ளிட்டோர் இருக்கும் போது, பயற்சியாளர் இல்லை என்ற கவலைப்பட தேவையில்லை. அவர்கள் அணி வீரர்களுக்கு மிகச்சிறந்த வழிகாட்டியாக உள்ளனர்.  களத்தில் வீரர்களுக்கு அனுபவ வீரர்களின் ஆலோசனையும் அவசியம்.’ என்று குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு