செய்தி விவரங்கள்

16 அணிகள் பங்குபற்றும் ஜீனியர் கிரிக்கட் போட்டி நாளை

16 அணிகள் பங்குபற்றும்  ஜீனியர் கிரிக்கட் போட்டி நாளை

16 அணிகள் பங்குபற்றவுள்ள ஜீனியர் கிரிக்கெட் போட்டி நாளை நியுசிலாந்தில் ஆரம்பமாகவுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் வாரியம் சார்பில் வருடத்திற்கு ஒருமுறை இடம்பெறும் 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கான 12 ஆவது ஜீனியர் கிரிக்கெட் போட்டிகள் நாளை நியுசிலாந்தில் ஆரம்பமாகவுள்ளன. மேலும் நாளை ஆரம்பமாகவுள்ள ஜீனியர் கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் மாசி மாதம் 3 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. இதில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி ‘ஏ’ பிரிவில் கென்யா, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா, நடப்பு சம்பியன் மேற்கிந்தியாவும் இடம்பெற்றுள்ளன,‘பி’ பிரிவில் இந்தியா, அவுஸ்ரேலியா, பப்புவா நியூ கினியா, ஜிம்பாவே அணிகள் இடம்பெற்றுள்ளன, ‘சி’ பிரிவில் பங்களாதேஸ், கனடா, இங்கிலாந்து, நமிபியா அணிகள் இடம்பெற்றுள்ளன, ‘டி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், அயர்லாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. மேலும் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும் எனவும் லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முன்னேறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு