செய்தி விவரங்கள்

இந்தியா அணி தென்னாபிரிக்காவை ஒருநாள் தொடரில் வெற்றி!

இந்தியா அணி தென்னாபிரிக்காவை ஒருநாள் தொடரில் வெற்றி!


இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதிய 5 ஆவது ஒருநாள் போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற்றுள்ளதுடன், ஒருநாள் தொடரிலும் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா அணி தென்னாபிரிக்காவை ஒருநாள் தொடரில் வெற்றி!

இந்தியா அணி தென்னாபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றது. இதனடிப்படையில் ஏற்கனவே நடைபெற்ற 4 போட்டிகளில் இந்தியா அணி 3 போட்டிகளிலும், தென்னாபிரிக்கா அணி 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து நேற்று இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதும் 5 ஆவது போட்டி போர்ட் எலிசபெத் மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. நேற்று ஆரம்பமான போட்டியில் முதலில் களமிறங்கிய இந்தியா அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 274 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இந்தியா அணி தென்னாபிரிக்காவை ஒருநாள் தொடரில் வெற்றி!

இதனை தொடர்ந்து களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி 42.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 201 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 73 ஓட்டங்களால் இந்தியா அணியிடம் தோல்வியடைந்துள்ளதுடன், ஒருநாள் தொடரிலும் தோல்வியடைந்துள்ளது. போட்டியில் ஆட்டநாயகனாக இந்தியா அணி சார்பில் 115 ஓட்டங்களை கூடுதலாக பெற்ற ரோகித் சர்மா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு