செய்தி விவரங்கள்

இந்தியா பெண்கள் அணி தென்னாபிரிக்கா பெண்கள் அணியை வெற்றி!

இந்தியா பெண்கள் அணி தென்னாபிரிக்கா பெண்கள் அணியை வெற்றி!


இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா பெண்கள் அணிகள் மோதியு முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா பெண்கள் அணி தென்னாபிரிக்கா பெண்கள் அணியை வெற்றி!

இந்தியா பெண்கள் அணி தென்னாபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2 ற்கு 1 என்ற கணக்கில் இந்தியா அணி தென்னாபிரிக்கா அணியை வெற்றி பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து நேற்று 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடர் ஆரம்பமாகியுள்ளது.

நேற்று ஆரம்பமான முதலாவது போட்டியில் முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 164 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா அணி 18.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 168 ஓட்டங்களை பெற்று 7 விக்கெட்டுக்களால் தென்னாபிரிக்கா அணியை வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் ஆட்டநாயகியாக இந்தியா அணி சார்பில் 54 ஓட்டங்களை கூடுதலாக பெற்ற மிதாலி ராஜ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு