செய்தி விவரங்கள்

இந்தியா தென்னாபிரிக்கா 2 ஆவது டெஸ்ட் போட்டி நாளை

இந்தியா  தென்னாபிரிக்கா 2  ஆவது டெஸ்ட் போட்டி நாளை


இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதும் 2 ஆவது டெஸ்ட் போட்டி நாளை ஆரம்பமாகவுள்ளது.

இந்தியா அணி தென்னாபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் டெஸ்ட் போட்டிகளின் 2 ஆவது டெஸ்ட் போட்டி நாளை செஞ்சூரியன் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. மேலும் தென்னாபிரிக்கா அணிக்கு வெற்றியை பெற்று கொடுத்த முக்கியமான மைதானங்களில் செஞ்சூரியன் மைதானம் பிரதானமானதாக காணப்படுகிறது.

இதனடிப்படையில் கடந்த 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்கா அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 620 ஓட்டங்களை இந்தியா அணிக்கு எதிராக பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இப்போட்டியே செஞ்சூரியன் மைதானத்தில் தென்னாபிரிக்கா அணி பெற்ற கூடுதலான ஓட்டங்கள் ஆகும்.

இந்நிலையில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியிலே இந்தியா அணி 72 ஓட்டங்களால் தென்னாபிரிக்கா அணியிடம் தோல்வியடைந்துள்ளது. இதனடிப்படையில் 2 ஆவது போட்டி நாளை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு