செய்தி விவரங்கள்

பார்வையற்றோருக்கான கிரிக்கெட்டில் பாக்கிஸ்தானை வீழ்த்திய இந்தியா

பார்வையற்றோருக்கான கிரிக்கெட்டில் பாக்கிஸ்தானை வீழ்த்திய இந்தியா


பார்வையற்றோருக்கான கிரிக்கெட் போட்டியில் பாக்கிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியா அணி வெற்றிபெற்றுள்ளது.

ஊனமுற்றவர்கள் பல துறைகளில் சாதித்து வருகின்றனர். அவ்வாறே கிரிக்கெட் விளையாட்டிலும் சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்குடன் பார்வையற்றோருக்கான 40 ஓவர்கள் கொண்ட உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் இன்று 7 ஆவது ஓடி போட்டியில் இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் அணிகள் மோதியுள்ளன. முதலில் டாஸ் வென்ற இந்தியா அணி பந்து வீச்சை தீர்மானித்துள்ளது. இதனால் களமிறங்கிய பாக்கிஸ்தான் அணி 40 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 282 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா அணி 35 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 285 ஓட்டங்களை பெற்று 8 விக்கெட்டுக்களால் பாக்கிஸ்தான் அணியை வெற்றிபெற்றுள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு