செய்தி விவரங்கள்

ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய இலங்கை அணி வீரர் சந்திமல்!

ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய இலங்கை அணி வீரர் சந்திமல்!


ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் இலங்கை அணி வீரர் திணேஷ் சந்திமல் முன்னேறியுள்ளார்.

ஐ.சி.சி ஒவ்வொரு டெஸ்ட் போட்டிகளின் முடிவிலும் துடுப்பாட்ட வீரர்கள் பந்து வீச்சாளர்கள் மற்றும் கிரிக்கெட் அணிகளை புள்ளிகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தி வருகின்றது. அதனடிப்படையில் கடந்த தரவரிசைப்படுத்தலில் 10 ஆம் இடத்தில் இருந்த இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் திணேஷ் சந்திமல் தற்போது 8 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இதனடிப்படையில் டெஸ்ட் தரவரிசையில் முதலாவது இடத்தில் அவுஸ்ரேலியா வீரர் ஸ்மித் 947 புள்ளிகளுடனும், 2 ஆவது இடத்தில் இங்கிலாந்து வீரர் ஜொய் ரூட் 881 புள்ளிகளுடனும், 3 ஆவது இடத்தில் இந்தியா வீரர் விராட் கோலி 880
புள்ளிகளுடனும் உள்ளனர். மேலும் 8 ஆம் இடத்தில் உள்ள இலங்கை அணியின் டெஸ்ட் அணித்தலைவர் தினேஷ் சந்திமல் 743 புள்ளிகளுடனும், 7 ஆவது இடத்தில் பாக்கிஸ்தான் வீரர் அசார் அலி 755 புள்ளிகளுடனும், 9 ஆவது இடத்தில் இங்கிலாந்து வீரர் குக் 742 புள்ளிகளுடன் காணப்படுகின்றனர்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு