செய்தி விவரங்கள்

ஜீனியர் கிரிக்கெட் முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி!

ஜீனியர் கிரிக்கெட் முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி!


ஜீனியர் கிரிக்கெட் உலக கிண்ண டி பிரிவுக்கான முதலாவது போட்டியில் பாக்கிஸ்தான் அணியை ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது.

19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஜீனியர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இன்று நியூசிலாந்தில் ஆரம்பமாகியுள்ளது. இப்போட்டிகளில் பங்கு பற்றவுள்ள 16 அணிகளும் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று வாங்கறை மைதானத்தில் இடம்பெற்ற டி பிரிவுக்கான போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தான் அணிகள் மோதியுள்ளன.

முதலில் களமிறங்கிய பாக்கிஸ்தான் அணி 47.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 188 ஓட்டங்களை பெற்றுள்ளது. துடுப்பாட்டத்தில் பாக்கிஸ்தான் அணி சார்பில் றொகெல் நஸிர் 105 பந்துகளில் 81 ஓட்டங்களை பெற்றுள்ளார். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 47.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து போட்டியில் 5 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது. இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் டர்விஸ் ரசூலி 78 பந்துகளில் 76 ஓட்டங்களை கூடுதலாக பெற்றுள்ளார். மேலும் ஆட்ட நாயகனாகவும் டர்விஸ் ரசூலி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு