செய்தி விவரங்கள்

3 ஆவது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி!

3 ஆவது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி!


ஜிம்பாபே மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய 3 ஆவது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாபே அணிகள் மோதும் இருபதுக்கு 20 மற்றும் ஒருநாள் தொடர்கள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இப் போட்டியில் ஏற்கனவே நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரிலும் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த 9 ஆம் திகதி மற்றும் கடந்த 11 ஆம் திகதி இடம்பெற்ற 2 ஒருநாள் போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன.

இதனை தொடர்ந்து நேற்று 3 ஆவது ஒருநாள் போட்டி ஆரம்பமாகியுள்ளது. நேற்று ஆரம்பமான 3 ஆவது போட்டியில் முதலில் களமிறங்கிய ஜிம்பாபே அணி 34.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 154 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து களமிங்கிய ஆப்கானிஸ்தான் அணி 27.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 158 ஓட்டங்களை பெற்று 6 விக்கெட்டுக்களால் ஜிம்பாபே அணியை வெற்றி பெற்றுள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு