செய்தி விவரங்கள்

பன்னாட்டு வீரர்கள் அடங்கிய அணியொன்று பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யும்

இலண்டனில் இடம் பெற்ற தனது வருடாந்த கூட்டத்தின் முடிவில் , கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை , இந்த வருடம் பாகிஸ்தானுக்கு பன்னாட்டு வீரர்கள் அடங்கிய அணி ஒன்றை அனுப்ப உள்ளது என்று குறிப்பிட்டிருக்கின்றது .

பாகிஸ்தானில் இந்தப் போட்டிகள் முழு உத்வேகம் பெற,   பன்னாட்டு அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான மூன்று ரீ20 மோதல்கள் அங்கு இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்போவதாக  கட்டுப்பாட்டுச் சபை அறிவித்துள்ளது .

எல்லா மோதல்களுமே லாகூர் நகரில் இடம்பெறுமென்றும் , அதன் விபரங்கள் பின்னர் அறியத் தரப்படும் என்றும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

அநேகமாக  இந்த வருடம் செப்டெம்பரில் ஒரு நாள் மோதல்கள்  இடம்பெறலாம் என்று பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் குறிப்பிட்டுள்ளார் .

இரண்டு வருடங்களுக்கு முன்பு சிம்பாவே அணி பாகிஸ்தானுக்கு விஜயம் செய்ததைத் தவிர, இன்று வரையில் பாகிஸ்தான் அணி வெளி நாடுகளில் இடம்பெற்று வரும் போட்டிகளிலேயே பங்குபற்றி வருகின்றது .2009ம் ஆண்டு லாகூர் நகரில் ,இலங்கை அணி பயணம் செய்த பேரூந்து ஒன்று பயங்கரவாதிகளால் தாக்கப்பட்ட சம்பவம் தொடக்கம் , ஏனைய அணிகள் பாகிஸ்தானுக்கு பயணிப்பதை நிறுத்திக் கொண்டுவிட்டமை இங்கே குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு