செய்தி விவரங்கள்

இங்கிலாந்து அணியில் இடம்பெறமாட்டாரா ஜேசன்?

இங்கிலாந்து  அணித் தலைவர் மோர்கன்  உறுதிப்படுத்தாவிடினும் , நேற்று இடம்பெற்ற பயிற்சியின்போது , இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஜேசன் றோய்  பங்கு பற்றாதது அவர் அணியில் சேர்க்கப்பட மாட்டார் என்பதை நிச்சயப்படுத்தி உள்ளது .

அநேகமாக விக்கெட் காப்பாளர் ஜொனி பெயர்ஸ்ரோ, இவரிடத்தில் விளையாடுவார் என்று நம்பப்படுகின்றது.

கடந்த ஒன்பது ஒருநாள் ஆட்டப் போட்டிகளில் றோய்  68 ஓட்டங்களை மாத்திரமே ஆடி எடுத்துள்ளார். தற்போது ஜேசன் அணியிலிருந்து நீக்கப்பட்டாலும்  தென் ஆபிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் ஆட்டங்களில் சேர்த்துக் கொள்ளப்படுவார் என்று கூறப்படுகின்றது .

இன்று அரை இறுதி ஆட்டத்திற்குள் நுழையும் இங்கிலாந்து அணிக்கு,  இந்த மாற்றம் அவசியம் என்றே கருதப்படுகின்றது.

ஜொனி பெயர்ஸ்ரோ ஒரு ஆரம்ப ஆட்டக்காரராக இல்லாதபோதும், இவர் எந்த நிலையிலும் தடுமாறாது துடுப்பெடுத்து ஆடக்கூடியவர் . என்றாலும் பாகிஸ்தான் அணியினரின் வேகப் பந்து வீச்சை எதிர் கொள்வது என்பது இவருக்கு சவாலாகவே இருக்கப் போகின்றது .

இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரச்சினைக்குரிய ஒன்றாக இருந்தாலும் , பந்துவீச்சாளர்கள் தம் பணியை இதுவரையில் சிறப்பாகச் செய்துள்ளார்கள் . குறிப்பாக சுழல் பந்து வீச்சாளர் ரஷீட்டும் பிளாங்கெட்டும் அபாரமாக பந்து வீசி விக்கெட்டுகளை எடுத்துள்ளார்கள் .

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு