செய்தி விவரங்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டன் பும்ராவா! கோலியின் நிலைமை?

டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியலில் பந்துவீச்சாளர்கள் பிரிவில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா 2-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அதேவேளையில், பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலி முதலிடத்தில் நீடிக்கிறார். ஆல்ரவுண்டர்களுக்கான பட்டியலில் முதல் 3 இடங்களில் மாற்றம் இல்லை. வங்கதேசத்தின் ஷாகிப் அல் ஹசன் முதலிடத்திலேயே தொடருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரை இழந்த தென் ஆப்பிரிக்காவின் இம்ரான் தாஹிர், பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தை இழந்து, 3 ஆவது இடத்துக்கு வந்துள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபியைக் கைப்பற்றிய பாகிஸ்தான் அணியின் இமத் வாசிம் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். தனது கிரிக்கெட் வரலாற்றில் இமத் வாசிம் முதலிடத்துக்கு வருவது இது முதல் முறையாகும். பேட்ஸ்மேன் பட்டியலில், கோலியைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் ஆரோன் ஃபிஞ்ச் 2 ஆவது இடத்திலும், நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன் 3 ஆவது இடத்திலும் நீடிக்கின்றனர். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அதிக ரன்கள் விளாசிய தென் ஆப்பிரிக்காவின் டி வில்லியர்ஸ் 12 இடங்கள் முன்னேறி, 20 ஆவது இடத்துக்கு வந்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு