செய்தி விவரங்கள்

இங்கிலாந்து அணிக்கு வெற்றி

அணித் தலைவர் மோர்கனின் அசத்தலான ஆட்டம், ஸ்டோர்க்கின் சதம் விளாசல் –இரண்டும் இணைந்து அவுஸ்திரேலிய அணியை மினி கிரிக்கெட் கிண்ணத் தொடரிலிருந்து விலக வைத்துள்ளது . இங்கிலாந்து அணியினரின் மூன்று விக்கட்டுகள் சரிந்து ஒரு பதட்டமான நிலை உருவாகினாலும் , அணித்தலைவரும் ஸ்டோர்க்சும் இணைந்து தமது அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றுள்ளார்கள் .

முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி ஆரம்பத்தில் சிறப்பாக ஆடினாலும் ஆட்டத்தின் பிற்பகுதியில் சீட்டுக் கட்டுகள் சரிந்தது போல வேகமாக விக்கட்டுகள் வீழ்த்தப்பட்டன .அடில் ரசீட்டின் சாதுர்யமான சுழல் பந்து வீச்சும் வூட்டின் அதிவேக பந்து வீச்சும்  5விக்கட்டுகளை 15ஓட்டங்கள் மாத்திரமே கொடுத்து கைப்பற்ற முடிந்துள்ளது .துடுப்பாட்ட    வீரர் ஹெட் சிறப்பாக ஆடினாலும் , இறுதியில் சேர்ந்து ஆட எவரும் இல்லாத இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டார் .

மழை குறுக்கீடு காரணமாக ஆட்டம் இடைநிறுத்தப்பட்டு , டீ எஸ் எல் முறையில் இங்கிலாந்து அணி 40ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது .

அவுஸ்திரேலிய அணி வெளியேற , பங்களாதேஷ் அணி தொடர்ந்து விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளது .

இன்று  தென் ஆபிரிக்க அணி இந்திய அணியை எதிர்த்து விளையாடுகின்றது . வாழ்வா சாவா என்ற நிலையில் இந்த இரு பலமான அணிகளும் மோதப்போகின்றன .காரணம் தோற்பவர் தொடரிலிருந்து வெளியேற்றப்படுவார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு