செய்தி விவரங்கள்

கிண்ணத்திற்கான வாய்ப்பிழந்து வெளியேறுகின்றது ஸ்ரீலங்கா அணி

நேற்று மாலை இடம்பெற்ற ஸ்ரீ லங்கா பாகிஸ்தானுக்கு இடையிலான மோதலில் மினி உலகக் கிண்ணத்தை பெறும் வாய்ப்பிழந்து தொடரிலிருந்து ஸ்ரீ லங்கா அணி வெளியேற்றப்பட்டுள்ளது .

மிக விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இரு அணிகளுக்கும் சம வாய்ப்பு இருந்தது . பாகிஸ்தான் அணியின் வேகப் பந்து வீச்சாளர்களின் சாதுர்யத்தால் ஸ்ரீ லங்கா அணி 236ஓட்டங்களை மாத்திரமே எடுத்த நிலையில் தனது சகல விக்கெட்டுகளையும் இழந்தது . ஸ்ரீ லங்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிக்வெல்ல மிகச் சிறப்பாக ஆடி 73ஓட்டங்கள் எடுத்திருந்தார் .

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக ஆடினாலும் ஸ்ரீ லங்கா அணியினரின் பந்து வீச்சில் திணற  ஆரம்பித்தவர்கள் வேகமாக ஆறு விக்கெட்டுகளை இழந்து ஸ்ரீலங்கா அணியினர் பக்கம் வெற்றி வாய்ப்பு சரிய ஆரம்பித்தது .6விக்கெட்டுகளை இழந்து 161ஓட்டங்களை மாத்திரமே எடுத்த நிலையில் , பாகிஸ்தான் அணியினர் தோல்வியைத் தழுவும் வாய்ப்பே அதிகமாக இருந்தது

எனினும்   ஸ்ரீ லங்கா அணியினர் களத்தில் பந்து பொறுக்குதலில் சோபிக்காத நிலையில் , பாகிஸ்தான் அணித்தலைவர் சப்ராஸ் அஹமத்தின் பொறுப்பான துடுப்பாட்டம் அவரது அணியை அரை இறுதி ஆட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.

ஓவர்களை முடிப்பதில் கூடுதல் நேரம் எடுத்துள்ளமை காரணமாக பாகிஸ்தான் அணித்தலைவரின் ஊதியத்தில் 20 வீதமும் அணியில் விளையாடியவர்களுக்கு 10வீதமும் குறைக்கப்பட்டுள்ளன . குறிக்கப்பட்ட நேரத்தில் குறிக்கப்பட்ட தொகை ஓவர்களைப் போட்டாக வேண்டும் என்பது  ஒரு கிரிக்கெட் விதி முறையாகும்

 நாளை இத் தொடரின் அரை இறுதி மோதல்கள் ஆரம்பமாகின்றன . நாளை புதனன்று  இங்கிலாந்து அணி பாகிஸ்தான் அணியை சந்திக்க , நாளை மறு நாள் இந்தியா பங்களாதேஷ் அணியுடனான மோதல் இடம்பெறுகின்றது

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு