செய்தி விவரங்கள்

முத்தொடர் போட்டிக்காக நாளை இலங்கை அணி பங்களாதேஸ் பயணம்

முத்தொடர் போட்டிக்காக நாளை இலங்கை அணி பங்களாதேஸ் பயணம்


முத்தொடர் போட்டிகளுக்காக நாளை காலை இலங்கை அணி பங்களாதேஸிற்கு பயணமாகவுள்ளது.

எதிர்வரும் 15 ஆம் திகதி இலங்கை, பங்களாதேஸ் மற்றும் ஜிம்பாபே அணிகள் மோதும் முத்தொடர் போட்டிகள் பங்களாதேஸ் டாக்கா மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளன.மேலும் இறுதிப் போட்டிகள் ஜனவரி 27 ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிய டெஸ்ட் தலைவர் சந்திமல் மற்றும் ஒருநாள் போட்டி அணித்தலைவர் மேத்யுஸ் தலைமையிலான இலங்கை அணி நாளை காலை பங்களாதேஸ் பயணமாகவுள்ளது. அதனடிப்படையில் இன்று  போட்டிகளில் பங்குபற்றும் வீரர்களுக்கான விசேட வழிபாடுகளும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் நடைபெறவுள்ள முத்தொடர் ஒருநாள் போட்டிகளை தொடர்ந்து, இலங்கை அணி மற்றும் பங்களாதேஸ் அணிகள் மோதும் 2 டெஸ்ட் போட்டிகள் எதிர்வரும் ஜனவரி 31 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

முத்தொடர் போட்டிக்காக நாளை இலங்கை அணி பங்களாதேஸ் பயணம்

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு