செய்தி விவரங்கள்

ஒரு நாள் ஆட்டத் தொடரை வென்றுள்ள இங்கிலாந்து அணி

தென் ஆபிரிக்க அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையில் நடைபெற்ற , மூன்று மோதல்கள் அடங்கிய ரீ20 போட்டிகள் தொடரில் , இங்கிலாந்து அணி 2-1என்ற கணக்கில் வெற்றி ஈட்டியுள்ளது .

நேற்று இங்கிலாந்தில் நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான மோதலில் , இங்கிலாந்து அணி , எதிரணியைத் தோற்கடித்திருந்தது .

முதலில் துடுப்பெடுத்து ஆடிய இங்கிலாந்து அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 181ஓட்டங்களை எடுத்திருந்தது . இந்த அணியின் புது வரவான மாலன் என்ற இளம் துடுப்பாட்டக்காரர் , 60பந்துகளில் 78ஓட்டங்கள் ஆடி எடுத்து , இங்கிலாந்தின் வெற்றிக்கு அத்திவாரம் இட்டிருந்தார் .

அணித்தலைவர் மோர்கன் இந்த மோதலில் பங்குபற்றவில்லை. நட்சத்திர வீரர்களான ஜோ ரூட் , பென் ஸ்டோக்ஸ் போன்றவர்கள்  அணிதலைவருடன் விளையாடாதது , பல ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு