செய்தி விவரங்கள்

பாகிஸ்தான் மகளிர் அணியை வீழ்த்தியுள்ள இங்கிலாந்து அணி

உலக வெற்றிக் கிண்ணத்திற்கான மகளிர்  அணிகளுக்கு இடையிலான , கிரிக்கெட் மோதல் ஒன்றில் , இங்கிலாந்து அபார வெற்றி பெற்றுள்ளது .

இந்தச் சுற்றுப் போட்டியின் ஆரம்ப மோதலில்,  இந்தியாவிடம் இங்கிலாந்து தோற்றிருந்தாலும், இந்தத் தடவை பாகிஸ்தானை வென்றுள்ளது .

இங்கிலாந்து அணி  7  விக்கெட் இழப்பிற்கு 377 ஓட்டங்கள் எடுத்திருந்தது . இரு துடுப்பாட்ட வீராங்கனைகள் ஆளுக்கொரு  சதம் பெற்றிருந்தனா். 

இங்கிலாந்து அணி பெற்ற தொகை, இந்தப் போட்டிகளின் சரித்திரத்தில் , ஒரு அணி விளையாடி எடுத்த இரண்டாவது மிகப் பெரிய தொகையாகும்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு  107 ஓட்டங்களை ஆடி எடுத்திருந்தது. 29.2  ஓவர்கள் மாத்திரமே போடப்பட்ட நிலையில் , சீரற்ற காலநிலை காரணமாக , விளையாட்டு இடைநிறுத்தப்பட்டது ,

டீஎஸ்எல் முறையின் பிரகாரம் , இங்கிலாந்து அணி வெற்றியாளராக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஞாயிறன்று இங்கிலாந்து இலங்கை அணியை சந்திக்கவுள்ளதும் , இந்தச் சுற்றுப் போட்டியில் எட்டு அணிகள் பங்கேற்றுவதும்  இங்கே குறிப்பிடத்தக்கது

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு