செய்தி விவரங்கள்

இங்கிலாந்து அணயில் மாற்றம் வருமா?

தற்பொழுது பரபரப்பாக இங்கிலாந்து-வேல்ஸ் மைதானங்களில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் கிரிக்கெட் மினி உலகக் கிண்ணச் சுற்றுப் போட்டிகளில் இங்கிலாந்து அணியிலிருந்து, அதன் தொடக்க ஆட்டக்காரரான ஜேசன் றோய் இனிவரும் ஆட்டங்களில் விலக்கப்படுவாரா அல்லது இணைக்கப்படுவாரா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. மிகச் சிறப்பாக விளையாடி அரை இறுதி ஆட்டத்திற்கு தேர்வாகியுள்ள இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரராக நடந்து முடிந்த இரு ஆட்டங்களிலும் றோய் சோபிக்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அது மாத்திரமல்ல கடந்த காலத்தில் இவர் விளையாடிய ஏழு ஒரு நாள் போட்டிகளில் 47 ஓட்டங்கள் மாத்திரமே ஆடியெடுத்திருந்தார்.

எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ள மோதலில் இவர் அணியில் இணைக்கப்படுவாரா அல்லது இவரது இடத்தை ஜொணி பெயர்ஸ்ரோவ் பிடிப்பாரா என்பது இன்னும் முடிவாக்கப்படவில்லை.
அணித்தலைவரான மோகன்,  றோய் அணியில் தொடர வேண்டும் என்பதையே விரும்புகிறார் என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும

 

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு