செய்தி விவரங்கள்

நான் முழு நேர பயிற்சியாளராக பணியாற்ற விரும்பவில்லை என்கிறார் மஹேல

இந்திய பயிற்சியாளராக  மஹேல ஜெயவர்த்தனா பணியாற்றப் போகிறார் என்ற வதந்திக்கு அவரே  முற்றுப்புள்ளி வைத்துள்ளார் . தற்போதைய நிலையில் என்னால் முழுநேரப் பணி எதிலுமே ஈடுபட முடியாது என்று இவர் டுவீட்டர் செய்தி மூலம் அறிவித்துள்ளார் .

இந்திய அணித் தலைவர் கோலிக்கும்  இந்திய பயிற்சியாளர்  கும்ப்ளேக்கும் இடையில் ஏற்பட்ட பிணக்கு காரணமாக , கும்ப்ளே பதவி விலக , அவர் இடம் காலியாகியது . இந்த இடத்தை நிரப்ப விரேந்தர் சேவாக் , டொம் மூடி  ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன . அடுத்து இலங்கை வீரர் மகேலாவின் பெயரும் அடிபட்டது.

இதற்குப் பதிலாகவே மஹேல நேற்று அனுப்பிய டுவீட்டர் செய்தி மூலம்  என்னை விட்டுவிடுங்கள் என்பதுபோல  செய்தி அனுப்பி இருக்கிறார் .

இதையிட்டு நான் பெருமைப்பட்டாலும் , தற்போதைக்கு  முழு நேர வேலையில் ஈடுபடும் நிலையில் நான் இல்லை என்பதை இவர் தெளிவுபடுத்தி உள்ளார்

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு