செய்தி விவரங்கள்

பயிற்சியாளர் ஆவதற்கு மஹேலவிற்கு அனுபவம் போதாது - திலங்க

ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பதற்கு மஹேல ஜயவர்த்தனவிற்கு போதிய அனுபவம் இல்லை என ஸ்ரீலங்கா கிரிக்ககெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து ஹ்ரஹம் போர்ட் விலகியதையடுத்து மஹேல ஜயவர்த்தன குறித்த பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையிலேயே ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன தலைவர் திலங்க சுமதிபால இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட திலங்க சுமதிபால, மஹேல ஜெயவர்த்தன இருபதுக்கு இருபது போட்டிகளுக்கு ஒரு சிறந்த பயிற்சியாளராக காணப்படுவதாகவும் எனினும் ஒருநாள் போட்டிகளை பொறுத்த வரையில் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பதற்கான அனுபவம் போதிய அளவு இல்லை என தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்க அணியின் முன்னாள் நட்டசத்திர துடுப்பாட்ட வீரரான மஹேல கடந்த 2014 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு