செய்தி விவரங்கள்

கோஹ்லி செய்தது தான் சரி... கோஹ்லிக்கு அதிகரிக்கும் ஆதரவு...

சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்குப் பின்னர் கேப்டன் கோஹ்லியுடனான மோதலால் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தார் அனில் கும்ப்ளே. இதை தொடர்ந்து கோஹ்லிக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல குரல்கள் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

இதற்கிடையே, BCCI குழுவில் முக்கிய பதவியில் இருக்கும் ஒருவர் கோஹ்லிக்கு தலைமை பொறுப்பு குறித்து சில எச்சரிக்கை கொடுத்துள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.

இந்திய அணியின் பயிற்சியாளருடனான கருத்துவேறுபாடு காரணமாகவோ வேறு காரணங்களாலோ இந்திய அணி சிறப்பாக விளையாடவில்லை என்றால் அது கோஹ்லியின் தலைமை பதவிக்கு ஆபத்து என்றவாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த சம்பவம் குறித்து இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் கூறுகையில், அணியின் தலைமை பயிற்சியாளர், இப்போது இல்லாத நிலையில் மூத்த வீரர்கள் யுவராஜ்சிங், டோணி, கோஹ்லி ஆகியோர் இந்திய அணியை வழிநடத்த முடியும். பயிற்சியாளர் இல்லை என்பது அணியை பாதிக்கவில்லை. அனைவருமே தொழில்முறையாக விளையாடுகிறவர்கள். மூத்த வீரர்கள் கலந்துரையாடினாலே அவர்கள் தரும் யோசனைகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் என தெரிவித்தார்.

இவ்வாறு பல சிக்கல்கள் தன்னை சுற்றி நடந்து வந்தாலும் இது எதையும் மனதில் ஏற்றிக்கொள்ளாத கோஹ்லி, தான் ஒரு உலக அளவில் சிறந்த வீரர் என்பதை நிரூபிக்கும் வகையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடந்து வரும் தொடரில், மிக சிறப்பாக விளையாடி வருகிறார். முதல் போட்டியில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமலும், இரண்டாம் போட்டியில் 66 பந்துகளில் 4 பௌண்டரி 4 சிக்ஸர் உட்பட 87 ரன்கள் எடுத்து அசத்தினார். இந்நிலையில், தன்னை சுற்றி பல பிரச்சனைகள் இருந்தாலும் தன் கவனம் சிதறவிடாமல் முழு கவனத்தையும் கிரிக்கெட்டில் செலுத்தி எப்பொழுதும் போல் சிறப்பாகவும், கேப்டன் என்ற பொறுப்புடன் ஆடி வருவதாகவும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் புகழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு வீரருக்கும் தங்களது சிறந்த காலகட்டத்தில் சிக்கல்கள் வருவது பொதுவானவை தான் ஆனால் அதில் கவனம் செலுத்தி தன் ஆட்டத்தை கோட்டை விட்டு விடாமல் சிறப்பாக செயல் பட்டுவரும் கோஹ்லியின் இந்த செயல் தான் அவரை உலக அளவில் சிறந்த வீரராக மேன்மேலும் உயர்த்தும் என்றவாறும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு