செய்தி விவரங்கள்

பிடிச்சா இருங்க இல்லனா கெளம்பிடுங்க - கோஹ்லிக்கு கடைசி எச்சரிக்கை !

கடந்த 2 நாட்களாக கிரிக்கெட் உலகை சலசலக்க வைத்திருக்கிறது, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர், அணில் கும்ப்ளேவின் பதவி விலகல். இவரின் ஓராண்டு பதவி காலம் சாம்பியன்ஸ் கோப்பை தொடருடன் நிறைவடைந்த போதிலும், இவரின் பதவி காலத்தை நீட்டித்தது BCCI. இருப்பினும், வேறு பயிற்சியாளரை தேர்ந்தெடுக்கும் முயற்சியிலும் BCCI ஈடுபட்டது. இந்நிலையில், அணில் கும்ப்ளே பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதற்கு, கேப்டன் கோஹ்லியுடன் ஏற்பட்ட மோதலே காரணம் என்றவாறு அவர் தெரிவித்திருந்தார். இருவருக்கு இடையே கடந்த 5 மாதங்களாக சரியான உறவு இல்லை என்றவாறும் பேசப்படுகிறது.

மேலும், அணில் கும்ப்ளேவின் பயிற்சி முறை தனக்கும் பிடிக்கவில்லை, அவரின் பயிற்சியில் நம்பிக்கை இல்லை என்றவாறு BCCI இடம் கோஹ்லி தெரிவித்ததாக தெரிகிறது. அதே வேளையில், கோஹ்லியுடனும் அணியினரிடமும் எந்த பிரச்சனையும் தனக்கு இல்லை என கும்ப்ளே தெரிவித்துள்ளார். இதையடுத்து, கோஹ்லியின் சர்ச்சைக்குரிய கருத்து கும்ப்ளேவுக்கு வந்து சேரவே, தான் மேலும் பயிற்சியாளராக தொடர்ந்தால் அது அணியின் முன்னேற்றத்துக்கு நல்லது இல்லை என நினைத்த கும்ப்ளே பதவி விலகியதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், BCCI யின் முக்கிய பதவியில் இருக்கும் ஒருவர், கோஹ்லியை எச்சரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. மிக சிறப்பாக அணியை வழிநடத்தி பல வெற்றிகளை பெற்ற கும்ப்ளே, தனது கருத்துக்களின் காரணமாக பதவி விலகியதையடுத்து, அடுத்து வரும் தொடர்களின் கோஹ்லி சிறப்பாக செயல்பட வேண்டும் எனவும், தவறினால் கேப்டன் பதவியில் இருந்து விலக்க நேரிடும் என கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த செய்தி கோஹ்லியின், உலகளாவிய எண்ணற்ற ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளதாக தெரிகிறது. மேலும், பொதுவாக கோஹ்லி அதிகம் கோபப்படக்கூடியவர்.

இதை சவாலாக எடுத்து தன்னை மேலும் நிரூபிக்கும் வல்லமை கொண்டவர், ஆனால் அதே கோபத்தின் காரணமாக தவறான முடிவுக்கு வந்துவிட கூடாது என்பதும் ரசிகர்களின் எண்ணமாக உள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு