செய்தி விவரங்கள்

ஒரு நாள் ஆட்டங்களின் துடுப்பாட்டத்தில் முதல் இடத்தில் கோலி

பிந்திய ஐ சீ சீ  தரப்படுத்தலின் பின்னர் இந்திய அணித்தலைவர் கோலி முதலிடத்தைப் பிடித்துள்ளார் . வில்லியர்ஸ் , வார்னர் ஆகியோரை இவர் ஓரங்கட்டி உள்ளார் . இதே சமயம் பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணியின்  வேகப்  பந்து வீச்சாளர் ஜோஷ் ஹஸெல்வுட் முதற் தடவையாக   பந்து வீச்சு தரப் படுத்தலில்  முன்னணியில் நிற்கிறார் . 

நடந்து முடிந்த பாகிஸ்தான் , தென் ஆபிரிக்க அணிகளுக்கு எதிரான மோதல்களில் முறையே 81, 76 ஓட்டங்களை ஆடி எடுத்தமையே , கோலி முதல் இடத்தை எடுத்தமைக்கான காரணமாகும் .

கடந்த ஜனவரி மாதம் தென் ஆபிரிக்காவின்  துடுப்பாட்ட வீரர் வில்லியர்ஸ்  முதலாம் இடத்தைப் பிடித்திருந்தார் . நடந்து முடிந்த சாம்பியன் கிண்ணப் போட்டிகளில் இவர் 4,0,16 என்று மிகக் குறைவாகவே ஓட்டங்களைப் பெற்றது  காராணமாக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்படுள்ளார் . இரண்டாம் இடத்தில் வார்னர் நிற்க நான்காம் ஐந்தாம் இடங்களை முறையே ரூட், வில்லியம்சன்  ஆகியோர் எட்டி உள்ளனர் .

மூன்று சாம்பியன் கிண்ண மோதல்களில் 9 விக்கெட்டுகளை எடுத்துள்ள ஹஸெல்வுட்  , 2015ஒக்டோபர் மாதம் மிச்சேல் ஸ்டார்க் முதலிடத்தில் இருந்ததன் பின்னர் இப்பொழுதுதான் ஒரு அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர் முதலிடத்தை பிடிக்க  உதவி உள்ளார்  .    தென் ஆபிரிக்காவின் இம்ரான் தகீர் இரண்டாம் இடத்தையும் , ஸ்டார்க் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளார்கள் .

அணிகளைப் பொறுத்த மட்டில் தென் ஆபிரிக்க அணி முதலாம் இடத்தில் நிற்கிறது . இங்கிலாந்து தனது சமீபத்திய  வெற்றிகளால்  ஐந்தாம் இடத்திலிருந்து  நான்காம் இடத்திற்கு  முன்னேறி இருப்பது இங்கே குறிப்பிடத் தக்கது .

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு