செய்தி விவரங்கள்

அவுஸ்திரேலியாவை அடுத்து தென் ஆபிரிக்க அணி வெளியேற்றம்

தற்பொழுது இங்கிலாந்தில் இடம்பெற்று வரும் மினி உலகக் கோப்பைக்கான மோதல்களில் நேற்று தென் ஆபிரிக்க கிரிக்கெட் அணி தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.

முதலில் களம் இறங்கிய இந்திய அணியின் அபார பந்து வீச்சினால் தென் ஆபிரிக்க சிங்கங்கள் 44.3ஓவர்களில்,   191 ஓட்டங்களை மாத்திரமே எடுத்த நிலையில் தமது வால்களைச் சுருட்டிக் கொண்டன . பதிலுக்கு துடுப்பெடுத்து ஆடிய இந்திய அணி இரண்டு விக்கெட்டுகள் மாத்திரமே இழந்த நிலையில் தமது இலக்கை சுலபமாக எட்டி , எட்டு விக்கெட்டுகளால் வெற்றி ஈட்டியது .

அணித்தலைவர் கோலி ஆட்டமிழக்காமல் 76ஓட்டங்களைப்  பெற்றிருந்தார் .நியூசிலாந்து, அவுஸ்திரேலியாவை அடுத்து தொடரில் இருந்து வெளியேறும் மூன்றாவது அணி தென் ஆபிரிக்காவாகும்

இன்று பாகிஸ்தான் –ஸ்ரீலங்கா அணிகள் மோதவுள்ளன . இதில் வெல்லும் அரை இறுதி ஆட்டங்களுக்கான நான்காவது அணியாக தேர்வு பெறும்

 

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு