செய்தி விவரங்கள்

93புள்ளிகளுடன் 8வது இடத்தில் நிற்கின்றது இலங்கை

நடந்து முடிந்த சாம்பியன் கிண்ண மோதல்களின் பின்னர் ஐசீசீ வெளியிட்ட தரப்படுத்தலின் பிரகாரம் 119 புள்ளிகளுடன் முதலிடத்தில் நிற்கின்றது . இரண்டாம் இடத்தில் அவுஸ்திரேலியா 117 புள்ளிகளுடனும் , 116புள்ளிகளுடன் இந்தியா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன .

இங்கிலாந்து ஐந்தாம் இடத்திலிருந்து நான்காம் இடத்திற்கு முன்னேறி இருக்கின்றது .

இலங்கை அணி எட்டாவது இடத்திற்கு இறங்க , பங்களாதேஷ் எழாவது இடத்திற்கு நகர்ந்துள்ளது .

டெஸ்ட் போட்டிகள் விளையாடும் நாடுகளான மேற்கிந்திய அணி 9வது இடத்திலும் , சிம்பாவே அணி 11ம் இடத்திலும் நிற்கின்றன .

நியூசிலாந்து , பாகிஸ்தான் அணிகள் முறையே ஐந்தாம் ஆறாம் இடங்களைப் பெற்றுள்ளன .

நடக்கப்போகும் சிம்பாவே அணியுடனான ஐந்து ஒரு நாள் மோதல்களில் இலங்கை அணியால் வெல்ல   முடிந்தாலும் , இந்தப் பருப்பு இந்தியாவுடன் வேகுமா என்பது சந்தேகமே .1997தொடக்கம்  இன்று வரையில்  இந்திய மண்ணில்  எந்த வெற்றியையும்  இலங்கை அணி சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு