செய்தி விவரங்கள்

மீண்டும் கேப்டன் ஆக இருக்கும் Captain Cool தோணி - ரசிகர்கள் உற்சாகம்!

சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்குப் பின்னர் கேப்டன் கோஹ்லியுடனான மோதலால் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தார் அனில் கும்ப்ளே. இதை தொடர்ந்து கோஹ்லிக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல குரல்கள் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

இதற்கிடையே, BCCI குழுவில் முக்கிய பதவியில் இருக்கும் ஒருவர் கோஹ்லிக்கு தலைமை பொறுப்பு குறித்து சில எச்சரிக்கை கொடுத்துள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது. இதை மனதில் ஏற்றிக்கொள்ளாத கோஹ்லி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக மிக சிறப்பாக விளையாடி வருகிறார்.

இந்நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளருடனான கருத்துவேறுபாடு காரணமாகவோ வேறு காரணங்களாலோ இந்திய அணி சிறப்பாக விளையாடவில்லை என்றால் அது கோஹ்லியின் தலைமை பதவிக்கு ஆபத்து என்றவாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு ஏதாவது நடந்தால் தோணி தான் இந்திய அணியை வழிநடத்துவார் என்றவாறும் கூறப்படுகிறது.

ஏற்கனவே தோணி மீண்டும் கேப்டன் பொறுப்பில் நியமிக்க வேண்டும் என தோணியின் ரசிகர்களின் விருப்பமாக உள்ள நிலையில், இதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் செய்தியை அறிந்து தோணி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவுக்காக பல கோப்பைகளை வாங்கி கொடுத்துள்ள, இந்திய கிரிக்கெட்டின் சிறந்த கேப்டனான தோணி, அவராக ஓய்வு முடிவை அறிவிக்கும் வரை கேப்டனாக தொடர வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாய் உள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு