செய்தி விவரங்கள்

இன்று நியூ சிலாந்து அணியை வீழ்த்துமா பங்களாதேஷ் ?

இன்று மாலை மினி உலகக் கோப்பைக்கான கிரிக்கெட் மோதலொன்று இடம்பெறப் போகின்றது . இத் தொடரில் இடம்பெறும் ஒன்பதாவது மோதல் இது .பங்களாதேஷ் அணிக்கு இது சோதனைக் காலம் –வாழ்வா சாவா என்பதுபோல ! இதில் தோற்றால் தொடரிலிருந்து வெளியேற வேண்டியதுதான் .

பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டக்கரரான ரமீம் இக்பால் மிகச் சிறப்பாக ஆடி வருகின்றார் . இங்கிலாந்து , அவுஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக முறையே 128, 95  ஓட்டங்களை எடுத்து அசத்தியுள்ள இவர் அரு முயற்சி வீணாகி விடுமா ?

அவுஸ்திரேலியாவுக்கு   எதிரான இவர் துடுப்பாட்டக்காரர்கள்  வரிசையில் ஏழாவது ஆளாக தன விக்கட்டை இழந்து வெளியேற , 14பந்துகள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் பங்களாதேஷ் அணி   தனது சகல விக்கட்டுகளையும் இழந்துள்ளது. பங்களாதேஷ்  அணிக்கு ஒரு முதுகெலும்பாக இவர் இருக்கிறார் என்றால் மிகையாகாது .

ஒரு நாள் ஆட்டங்களில் ஆறாம் இடத்திற்கு முதற் தடவையாக உயர்ந்திருக்கின்றது பங்களாதேஷ். இந்தத் தடவை சோபித்தால்தான் இந்தத் தரவரிசையில் நீடிக்கலாம்

 

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு