செய்தி விவரங்கள்

'ஒரு தாயின் வயிற்றில் பிறக்காத சகோதரர்கள் நாங்கள்' - தோனி குறித்து பிராவோ.!

இன்னொரு தாயிடமிருந்து கிடைத்த என் சகோதரன் தோனி என்று மேற்கிந்திய  தீவுகளின் அணி வீரர் பிராவோ சமூக வலைத்தளமான  இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். மேற்கிந்திய அணியின் சிறந்த வீரரான பிராவோ ஐபிஎல் போட்டிகளின் போது சென்னையின் அணியில் விளையாடியதன் காரணமாக, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, ரெய்னா உள்ளிட்டோருடன் நட்புக்கொண்டிருந்தார்.

இந்நிலையில், தற்போது மேற்கிந்திய அணிகளுடனான போட்டியில் விளையாடிவரும் இந்திய அணி வீரர்களை  சில நாட்களுக்கு முன்பாக நேரில் சந்தித்த பிராவோ தனது இல்லத்துக்கு வரும்படி அழைப்பு விடுத்தார்.

பிராவோவின் அழைப்பின் பேரில், தோனி விராட் கோலி, ஷிகார் தவான், புவனேஷ்வர், ரஹானே ஆகியோர் சென்றுள்ளனர். இதில் தோனியுடன் அவரது மகள் ஸிவா தோனியும் வந்திருந்தார்.

இது தொடர்பான புகைப்படங்களை அவரது இஸ்டர்கிராம் பக்கத்தில் பிராவோ வெளியிட்டுள்ளார். குறிப்பாக தோனியுடன் பிராவோ மற்றும் அவரது அம்மா இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள பிராவோ அதில், மற்றொரு தாயிடமிருந்து எனக்கு கிடைத்த என் சகோதரன் நேற்றிரவு எனது இல்லத்தில் அவரது அழகான மகளுடன்” என்று பதிவிட்டுள்ளார்.

இச்சந்திப்பிற்கு முன்னதாக, இரு நாட்களுக்கு முன் என் மச்சான் தோனியை சந்தித்ததில் மகிழ்ச்சியென பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு