செய்தி விவரங்கள்

இங்கிலாந்து அணியில் மீண்டும் இணையும் பென்டோக்ஸ்!

இங்கிலாந்து அணியில் மீண்டும் இணையும் பென்டோக்ஸ்!


இங்கிலாந்து அணியில் வழக்கில் இருந்து ஜாமீன் கிடைத்ததால் மீண்டும் பென்டோக்ஸ் இணைந்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் பென்டோக்ஸ் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் பிரிஸ்டல் நகரில் உள்ள இரவு விடுதியில் வாலிபரை தாக்கிய சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளார். இந்த சர்ச்சை தொடர்பாக கைது செய்யப்பட்ட பென்டோக்ஸ் மீது வழக்கு தொடரப்பட்ட பின் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதனடிப்படையில் நேற்று நடைபெற்ற முதலாவது வழக்கை விசாரித்த நீதிபதி பென்டோக்ஸ் உட்பட 3 பேருக்கு ஜாமீன் வழங்கியுள்ளதுடன், மீண்டும் வழக்கு 12 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் இங்கிலாந்து நியூசிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா அணிகள் மோதும் முத்தொடர் போட்டியில் பென்டோக்ஸ் கலந்து கொள்ளவுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு