செய்தி விவரங்கள்

பயிற்சியாளராக அனில் கும்ளே இந்திய அணியில் தொடர்வார்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயற்பாடுகளை கண்காணிக்கும் நிர்வாகிகளின் தலைவர்  வினோத் ராய் , அனில் கும்ளே தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருப்பார் என்று அறிவித்துள்ளது . மேற்கிந்திய அணிக்கெதிரான தொடரிலும் இவரே பயிசியாளராக இருப்பார். ஆனால் அது அவரின் ஒப்புதலிலேயே தங்கி இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார் .

புதிய ஒரு பயிற்சியாளரை தெரிவு செய்ய கால அவகாசம் போதாது . இந்த மாதம் 20ந் திகதி இந்திய குழு மேற்கு இந்திய தீவுக்கு பயணமாகின்றது . எனவே அனில் கும்ளே தன் பணியைத் தொடர்வார் என்று கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைத் தலைவர் தெரிவித்துள்ளார் .

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு