செய்தி விவரங்கள்

ஸ்ரீலங்கா அணித்தலைவராக மீண்டும் ஏஞ்சலோ மெத்தியூஸ்!

மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான ஸ்ரீலங்கா அணித்தலைவராக மீண்டும் ஏஞ்சலோ மெத்தியூஸ் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீலங்கா அணித்தலைவராக மீண்டும் ஏஞ்சலோ மெத்தியூஸ்!

எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள, பங்களாதேஷ் மற்றும் சிம்பாப்வே அணிகளுடன் இடம்பெறவுள்ள முத்தரப்பு ஒருநாள் கிரிக்கட் போட்டிகளில் பங்கேற்கவுள்ள ஸ்ரீலங்கா அணியினரின் விபரம், இன்று செவ்வாய்க்கிழமை(09.01.2018) அறிவிக்கப்படவுள்ள நிலையில், ஏஞ்சலோ மெத்தியூஸ் அணித்தலைவராக பொறுப்பேற்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

இதன்படி, தேர்வுக் குழுவினரை இன்று மெத்தியூஸ் சந்திக்கவுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து ஊடக சந்திப்பையும் நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு அணித்தலைமையை ஏற்றுக் கொண்ட மெத்தியூஸ் தலைமையில், 98 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ஸ்ரீலங்கா அணி, அவற்றில் 47 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. இதேவேளை அணித்தலைவராக ஒருநாள் போட்டிகளில், 2 ஆயிரத்து 949 ஓட்டங்களையும் குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு