செய்தி விவரங்கள்

ஜீனியர் கிரிக்கெட் முதல் நாளில் 8 அணிகளுக்கான மோதல்

ஜீனியர் கிரிக்கெட் முதல் நாளில் 8 அணிகளுக்கான மோதல்


ஜீனியர் கிரிக்கெட் ஆரம்ப நாளில் 8 அணிகளுக்கான 4 போட்டிகள் இடம்பெறவுள்ளன.

12 ஆவது 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஜீனியர் கிரிக்கெட் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இன்று நியூசிலாந்தில் ஆரம்பமாகவுள்ளது. இப்போட்டியில் பங்கு பற்றவுள்ள 16 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ‘ஏ’ பிரிவில் கென்யா, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா, நடப்பு சம்பியன் மேற்கிந்தியாவும் இடம்பெற்றுள்ளன,‘பி’ பிரிவில் இந்தியா, அவுஸ்ரேலியா, பப்புவா நியூ கினியா, ஜிம்பாவே அணிகள் இடம்பெற்றுள்ளன, ‘சி’ பிரிவில் பங்களாதேஸ், கனடா, இங்கிலாந்து, நமிபியா அணிகள் இடம்பெற்றுள்ளன, ‘டி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், அயர்லாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

அதனடிப்படையில் இன்று ஆரம்பமாகவுள்ள முதலாவது நாள்  போட்டியில் 8 அணிகள் 4 போட்டிகளில் மோதவுள்ளன. அதனடிப்படையில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தான் அணிகளுக்கும், பப்புவா நியு கினியா மற்றும் ஜிம்பாபே அணிகளுக்கும், பங்களாதேஸ் மற்றும் நமிபியா அணிகளுக்கும்,  நியூசிலாந்து மற்றும் மேற்கிந்தியா அணிகளுக்குமான போட்டிகள் இன்று இடம்பெறவுள்ளன. மேலும் இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கான போட்டிகள் நாளை ஆரம்பமாகவுள்ளன.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு