செய்தி விவரங்கள்

சீதாலட்சுமியின் உண்மை முகம் வீடியோவாக பரவுகிறது.! இதற்காக தான் இந்த நிகழ்ச்சியா

சீதாலட்சுமியின் உண்மை முகம் வீடியோவாக பரவுகிறது.! இதற்காக தான் இந்த நிகழ்ச்சியா

பிரபல நடிகர் ஆர்யா ஒரு பிரபல தொலைக்காட்சியில் திருமணத்திற்காக பெண் தேடுகிறார். இவருக்காக 16 பெண்கள் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். இந்த பெண்கள் ஆர்யாவை காதல் செய்வது போலும், ஆர்யாவின் அன்பிற்கு சண்டை போடுவது போலவும் இந்த நிகழ்ச்சியில் காண்பிக்கிறார்கள். அதிலிருந்த சில பெண்களை எலிமினேட் செய்து வருகிறார். தற்போது அகாதா, சுசானா, சீதாலட்சுமி என 3 பெண்கள் மட்டும் தான் இருக்கிறார்கள். இந்த மூவரில் ஒருவரை மட்டும் தான் ஆர்யா திருமணம் செய்ய போகிறார். இந்த நிலையில், மூன்று பெண்களும் திருமணத்திற்கான உடைகளை தேர்தெடுத்துக் கொண்டு திருமணத்திற்கு தயாராகிவிட்டார்கள்.

திருமணத்திற்கு முன் நடக்கும், மெஹந்தி நிகழ்வும் முடிந்துவிட்டது. இந்த நிலையில், அடுத்து திருமணத்திற்காக பல பிரபலங்கள் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்கள். பிரேம்ஜி, பிரசன்னா, சினேகா, வரலக்ஷ்மி, அனாந்தி, கீர்த்தி மற்றும் ஆர்யாவின் நண்பர்கள் என பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் ஆர்யா சீதாலட்சுமியை தான் திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்று முன்பே செய்திகள் வெளியானது.

சீதாலட்சுமியின் உண்மை முகம் வீடியோவாக பரவுகிறது.! இதற்காக தான் இந்த நிகழ்ச்சியா

இந்த நிலையில் சீதா லட்சுமி குறித்த சில உண்மைகள் வெளியாகியுள்ளது. கேரளத்து பெண்ணான இவரின் நிஜ பெயர் லட்சுமி ஹரிஹரன் என்பது தானாம். இவர் மாடலிங் செய்வதற்கு முன் ஒரு வங்கியில் மூன்று வருடத்திற்கு மேல் வேலை செய்துள்ளார். இவருக்கு மாடலிங், நடிப்பு, ஆங்கரிங் போன்ற விஷயத்தில் தான் அதிக நாட்டமாம். ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியை பயன்படுத்தி பிரபலபடுத்திக் கொள்ள தான் அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளாரோ என்னவோ தெரியவில்லை. மேலும், ஆர்யாவை திருமணம் செய்துகொண்டால் நிச்சயம் இரண்டு வருடம் ஒன்றாக தான் வாழவேண்டி இருக்கும்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு