செய்தி விவரங்கள்

'மேயாத மான் ஆனார்'- நடிகை பிரியா பவானி ஷங்கர்.!

தனியார் தொலைக்காட்சியொன்றில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி, சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை எனும் சீரியலின் வழியே அதிகப்படியான இரசிகர்களின் மனங்களை வென்றவர் பிரியா பவனி ஷங்கர். தனது குழந்தைத்தனமான நடிப்பின் வழியே அதிகப்படியாக குழந்தை மற்றும்  பெண் ரசிகர்களை கொண்டவர்.

இவர் காதலிப்பதாகவும், திருமணத்திற்கு பின் வெளிநாட்டிற்கு செல்லவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வந்த நிலையில், தான் நடித்து வந்த தொலைக்காட்சி தொடரிலிருந்தும் விலகினார் பிரியா.

இந்நிலையில் அவர் பெரியதிரையில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். புதுமுகம் ரத்ன குமார் இயக்கத்தில் வைபவ் ஹீரோவாக நடித்துள்ள படத்தில் பிரியாதான் ஹீரோயின். வட சென்னையில் நடக்கும் காதல் கதையான இந்த படத்திற்கு மேயாத மான் என்று பெயர் வைத்துள்ளனர். படத்தை கார்த்திகேயன் சந்தானம் இயக்கியுள்ளார்.

படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை பிரியா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதன் காரணமாக பிரியாவின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு