செய்தி விவரங்கள்

'பிறந்தநாளில் விஜய்க்கு வந்த சோதனை'- நீதிமன்றம் நோட்டீஸ்.!

தமிழ்த்திரையுலகின் முன்னணி நடிகர்களான விஜய்  நடிப்பில் உருவான ‘பைரவா’ படமும், சூர்யா நடிப்பில் உருவான ‘சிங்கம்-3’ ஆகிய இரண்டு படங்களும் தான் இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த திரைப்படங்கள்.

அதற்கேற்றாற்போல், இந்த இரண்டு படங்களும் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டவை. ஆனால், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் எதிர்ப்பார்த்த லாபத்தை தரவில்லை எனவும், மேலும் இந்தப் படத்தால் அவர்கள் நஷ்டமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த இரண்டு படங்களுக்கும் திரையரங்கிலேயே அதிக கட்டணம் வைத்து டிக்கெட் விற்றுள்ள்ள காரணத்தால் ‘பைரவா’ மற்றும் ‘சிங்கம்-3’ படத்துக்கு கூடுதலாக டிக்கெட் கட்டணம் வசூலித்தது ஏன்? காரணம் குறித்து பதிலளிக்க தியேட்டர் அதிபர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தியேட்டர் அதிபர்கள் தங்களுக்கு ஏதேனும், பிரச்னை எனும் போது தயாரிப்பாளர்களையும், நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யாவுக்கு நெருக்குதல் கொடுப்பார்கள் என தெரிகிறது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு