செய்தி விவரங்கள்

ஜல்லிக்கட்டு போராளிகளை கொச்சைப்படுத்தும் ஜூலியானா- இவரா உண்மைப் போராளி.?

தமிழர்களின் பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டு மீது திணிக்கப்பட்ட தடையை எதிர்த்து, தமிழர் கடலாம் மெரினாவில் லட்சோபலட்சம் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்தினர். இரவு பகலாக நடந்த இந்த வரலாற்று போராட்டத்தில் பெண்களும், ஆண்களும் ஒன்றாக அமர்ந்தே போராட்டமும்  நடத்தினர்  சகோதர, சகோதரிகளாக. தமக்கான  உரிமைகள் மறுக்கப்படுகையில் கொதித்தெழுவார்கள் தமிழர்கள் சாதி, மதம் கடந்து என்பதனை உலகினுக்கு உரக்கச் சொல்லியது சல்லிக்கட்டு போராட்டம்.

இந்நிலையில், பிரபல தனியார்  தொலைக்காட்சியொன்று, 'பிக் பாஸ்' எனும் பெயரில்  நிகழ்ச்சியொன்றினை நடத்திவருகிறது. இதில் தமிழ் நடிகர்கள்  உள்ளிட்ட 15  பேர் கலந்து கொண்டுள்ளனர். இவர்களில் ஒருவராக கலந்து கொண்டுள்ளார் ஜூலியானா. இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட கோடிபேர்களில் ஒருவர்.

இவர் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, நடிகர் ஸ்ரீயிடம், வீட்டிற்குள் வருகையில் தன்னை கட்டிப்பிடிக்க யாரும் இல்லை எனவும், நடிகர்  ஸ்ரீயை நிகழ்ச்சியை விட்டு செல்ல வேண்டாமென தெரிவிக்கிறார்.

எவருடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் தலையிட நமக்கு உரிமையில்லை, ஆனால், தமிழர்களின் வரலாற்று போராட்டத்தில் பங்கேற்ற ஒருவர், அந்த போராட்டத்தின் காரணமாகவே அடையாளம் பெற்று அந்த தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்ற ஒருவர், இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுவது சல்லிக்கட்டு போராட்டதுக்கு களங்கம் விளைவிப்பதாக கருத்து தெரிவிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

அப்படி அவருக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இன்றியமையாதது எனில், சல்லிக்கட்டு அடையாளத்தை தவிர்த்துவிட்டு கலந்துகொள்ளலாமென தெரிவிக்கின்றனர் பொதுமக்கள்.

கார்ப்ரேட் ஊடகங்கள் தங்களின் டிஆர்பி பசிக்காக என்னவேண்டுமானாலும் செய்யும், அதற்கு இத்தகைய விளம்பர பிரியர்களும் இரையாகிறார்கள் என்பது கசப்பு நிறைந்த உண்மை.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு