செய்தி விவரங்கள்

இறுதியில் அபர்ணதியை தான் ஆர்யா திருமணம் செய்கிறார்.! ஆதாரம் உள்ளே.!

இறுதியில் அபர்ணதியை தான் ஆர்யா திருமணம் செய்கிறார்.! ஆதாரம் உள்ளே.!

பிரபல நடிகர் ஆர்யா ஒரு பிரபல தொலைக்காட்சியில் திருமணத்திற்காக பெண் தேடுகிறார். இவருக்காக 16 பெண்கள் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். இந்த பெண்கள் ஆர்யாவை காதல் செய்வது போலும், ஆர்யாவின் அன்பிற்கு சண்டை போடுவது போலவும் இந்த நிகழ்ச்சியில் காண்பிக்கிறார்கள். அதிலிருந்த சில பெண்களை எலிமினேட் செய்து வருகிறார். தற்போது அகாதா, சுசானா, சீதாலட்சுமி என 3 பெண்கள் மட்டும் தான் இருக்கிறார்கள்.

இந்த மூவரில் ஒருவரை மட்டும் தான் ஆர்யா திருமணம் செய்ய போகிறார். இந்த நிகழ்ச்சியில் அதிக ரசிகர்களை பெற்றவர் தான் அபர்ணதி ஆனால் இவரை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றிவிட்டார்கள். ஆனால் தற்போது நடக்கவிருக்கும் இறுதிக்கட்டமான திருமணத்திற்கு அபர்ணதியை மட்டும் ஆர்யா அழைத்திருகிறாராம். சீதாலட்சுமியுடன் ஆர்யாவிற்கு திருமணம் நடக்கும் என்று கூறப்பட்ட நிலையில், இறுதியில் அபர்ணதியுடன் ஆர்யா சேர்ந்துவிட்டதாக, அபர்ணதியின் தங்கை அவரது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது அனைவருக்கும் அதிர்ச்சியாக உள்ளது. அவர் வெளியிட்டு பதிவில் கூறியதாவது: என் அக்கா தான் ஆர்யாவின் இதயத்தை வென்றுள்ளார். அபர்ணதியை வெளியேற்றிய பிறகு ஆர்யாவிற்கு மற்ற பெண்களை பிடிக்கவில்லை. அபர்ணதியின் காதலை புரிந்துகொண்ட ஆர்யாவிற்கு மற்ற பெண்களை திருமணம் செய்ய பிடிக்கவில்லை. என்று கூறியுள்ளார். இதில் இருந்து ஆர்யாவிற்கு யாருடனும் திருமணம் ஆகவில்லை என்றும், அபர்ணதியை காதல் செய்வதாக கூறப்போகிறார் என்று தெரியவந்துள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு