செய்தி விவரங்கள்

சல்லிக்கட்டு போராட்டத்தை ஏளனமாக பேசிய நடிகைகள் ஆர்த்தி, காயத்ரி ரகுராம்.!

தனியார் தொலைக்காட்சியொன்று பிக் பாஸ் எனும் நிகழ்ச்சியினை தமிழில் தற்போது நடத்தி வருகிறது. இதில், தொழில் முறை நடிகர்கள் தவிர, தமிழர்தம் உரிமைப்போராட்டமான சல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கெடுத்த ஜூலியனா எனும் செவிலியர் ஒருவரும் பங்கேற்றுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் ஜூலியானாவின்  செயற்பாடுகள் சல்லிக்கட்டு போராட்டத்தினையும், போராளிகளையும் கொச்சைப்படுத்துகிற வகையில் அமைந்துள்ளதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது. அதற்கான காரணம் சாதி, மதம், சினிமா மோகம் உள்ளிட்ட எல்லாவற்றையும் கடந்து,  தமிழராக ஒன்றிணைந்து தமக்கான உரிமையை வென்றெடுத்தனர். 

அந்த நிகழ்வில், தமிழர் கடலாம் மெரினாவில் கூடிய கோடிக்கணக்கானோரில் ஒருவர் தான் ஜீலியானா. அதன் வாயிலாகவே அடையாளம் பெற்ற இவரது செயற்பாடுகள் மெச்சத்தகுந்ததாக இல்லை எனவும், குறிப்பிட்ட ஊடகத்தின் சதித்திட்டத்திற்கு இவர் பலிகட ஆக்கப்பட்டார் எனவும் ஒரு சாரார் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அந்த நிகழ்ச்சியில் ஜூலியானாவிடம், பாஜக கட்சியை சார்ந்த காயத்ரி ரகுராம், அதிமுக கட்சியை சார்ந்த நடிகை ஆர்த்தி " கடவுளிடம் வரம் கேட்கும்போது இப்படியா போராட்டம் செய்து கேட்போம்" என்று சல்லிக்கட்டு போராட்டம் குறித்து பேசுகின்றனர்.

'உரிமைகளுக்காக குரலெழுப்பவதும்; கடவுளிடம் வரம் கேட்பதுவும் ஒன்றா' எனவும், இதுவரையிலும் தமிழர் தம் நலனுக்காக ஓர் சிறு துரும்பை கூட கிள்ளிப் போடாத இவர்கள் எதனடிப்படையில் இத்தகைய பேச்சுக்களை பேசுகிறார்கள். சமூகத்தின் மேட்டுக்குடி வர்க்கத்தின் பார்வையாகவே இது கருதப்படுகிறது என கடுமையான விமர்சனங்களை  முன்வைக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

சமூகத்தில் எதையாவது பேசு பொருளாக்கி அதன் வாயிலாக, டிஆர்பி அதிகரிக்க முயல்கின்றன கார்ப்பரேட் ஊடகங்கள் என்பதுவே நிதர்சனமான உண்மை.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு