செய்தி விவரங்கள்

தமிழ் ராக்கர்ஸ் இணையதள நிர்வாகிகள் 4 பேர் கைது!

திரையுலகத்தியே மிரட்டி வந்த தமிழராக்கர்ஸ் அட்மின் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ் ராக்கர்ஸ் இணையதள நிர்வாகிகள் 4 பேர் கைது!

தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களை சட்டவிரோதமாக இணையத்தில் பதிவு செய்து திரையுலகத்திற்கே சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர்கள் தமிழராக்கர்ஸ் குழுமம். இதனால் பெரும் அளவில் நஷ்டமடைந்து வந்த தயாரிப்பாளர்கள் இதற்கு முடிவு காட்டும் விதமாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பைரசி என்ற குழு ஒன்று உருவாக்கப்பட்டது.

இதன்மூலம் தமிழ் ராக்கர்ஸ் குழுவினை விரைவில் கண்டறிவோம் என விஷால் குழுவினர் சூளுரைத்திருந்தனர். அதன்படி இன்று கேரளாவில் தமிழ் ராக்கர்ஸ் குழுமத்தை சேர்ந்த 4 பேரை கேரள போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் விழுப்புரத்தை சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு