செய்தி விவரங்கள்

வேர்ல்ட்வார் 2: ஹாலிவுட் படத்திற்கு செல்லும் கபாலி நடிகை!

வேர்ல்ட்வார் 2: ஹாலிவுட் படத்திற்கு செல்லும் கபாலி நடிகை!

இந்தியாவின் பல மொழிகளில் நடித்து பிரபலமான நடிகையாக வலம்வருபவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் தமிழில் டோனி, வெற்றிச் செல்வன், ஆல் இன் ஆல் அழகுராஜா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் ரஜினியுடன் இணைந்து நடித்த கபாலி படமே தமிழில் ரசிகர்களை பெற்று தந்தது. தற்போது பாலிவுட்டில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்து வரும் இவர், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனேவை அடுத்து ஹாலிவுட்டில் கால்பதிக்க உள்ளார்.

வேர்ல்ட்வார் 2: ஹாலிவுட் படத்திற்கு செல்லும் கபாலி நடிகை!

இந்தியாவில் செக்ஸ் சர்ச்சைகள் குறித்து மிகவும் வெளிப்படையாகவும், துணிவாகவும் கருத்துக்களை தெரிவித்து வந்த ராதிகா, அவ்வப்போது சர்ச்சையான படங்களிலும் நடித்து பரபரப்பை கிளம்புவார். இந்நிலையில், 'வேர்ல்ட் வார் 2' எனும் ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் இரண்டாம் உலகப் போரில் நாஜிக்களின் படையால் சுட்டுக் கொல்லப்பட்ட இங்கிலாந்து நாட்டு உளவாளி நூர் இனயத் கான் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். நூர் இனயத் கான் இந்தியாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவுள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு