செய்தி விவரங்கள்

ஓவியா மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வருவதை குறித்து கமல் கூறியது..?

பிக் பாஸ் நிகழ்ச்சி ஓவியா இல்லாமல் கலை இழந்தது என்று சொல்லலாம். மக்கள் தற்போது இந்த நிகழ்ச்சி மீது பெரிய ஈடுபாடு காட்டுவது இல்லை. கமல் ஒவ்வொரு வாரமும் பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களை சந்திப்பார். அதேபோல், இந்த வாரம் கமல் கூறியதாவது: இந்த கேம் ஒரு இன்டர்நேஷனல் பார்மட் ஷோ, இந்த விளையாட்டில் சில விசித்திரமான விதிமுறைகள் உள்ளன, அதாவது மக்களே ஒட்டு போட்டு வெளியேற்றிய பங்கேற்பாளர்கள் கூட மீண்டும் திரும்ப வரலாம், அதே போல் மக்களுக்கு பிடித்த பங்கேற்பாளர்கள் கூட மீண்டும் திரும்ப வரலாம் என்று விளக்கமளித்தார். இதன் மூலம் மீண்டும் ஓவியா திரும்ப வாய்ப்பு உள்ளது என்று எண்ணி ரசிகர்கள் கரகோஷத்தை எழுப்பினர்.

ஓவியாவிடம் மீண்டும் நிகழ்ச்சிக்கு வர பேச்சுவார்த்தை நடந்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. வரும் 15 ஆம் தேதி ஒரு பிரபலம் நிச்சயமாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு