செய்தி விவரங்கள்

இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடக்கவிருக்கும் பயங்கரம் என்ன..??

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் கஞ்சா கருப்புக்கும், நடிகை ஓவியாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது போன்ற காட்சியை ஒளிபரப்பியது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3ம் நாள் நிகழ்வு நேற்றிரவு இரவு 9 மணிக்கு ஒளிபரப்பப்பட்டது. மனைவி மற்றும் பிள்ளைகளை பிரிந்து இருப்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் வையாபுரி கண்ணீர் விட்டு தேம்பி தேம்பி அழுத காட்சியுடன் நேற்றைய நிகழ்வு காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து சண்டை, சச்சரவு, முதல் காதல் அனுபவம் மற்றும் பிக்பாஸ் குடும்பத்தின் பிறந்த நாள் வாழ்த்து என களைகட்டியது. தங்களின் முதல் காதல் குறித்து ஆரவ், கஞ்சா கருப்பு பகிர்ந்து கொண்டனர். கல்யாணம் காட்சி என்று எதுவும் இல்லாமல் இருந்த என்னை இயக்குநர் பாலா அழைத்து பிதாமகனில் நடிக்க வைத்தார் என கஞ்சா கருப்பு கூறினார்.

தான் படிக்காததால் ஒரு டாக்டரை தான் கல்யாணம் செய்வேன் என்று இருந்த கஞ்சா கருப்பு டாக்டர் பெண்ணையே முதலில் காதலித்து அவரையே கல்யாணம் செய்து கொண்டதாக தெரிவித்தார். இறுதியில் புரேமோ காட்சி ஒன்று ஒளிபரப்பானது. அதில் கஞ்சா கருப்பு, நடிகை ஓவியாவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுவது போல் இருந்தது. ஏதோ டீமுக்குள் பேசுவது போல் அந்த காட்சி காண்பிக்கப்படுகிறது. அப்போது ஓவியா ஏதோ கூற, கடுப்பான கஞ்சா கருப்பு ஆவேசமாக பேசுவது போல் உள்ளது. ஏற்கனவே வையாபுரி தேம்பி தேம்பி அழுவது போன்ற காட்சிகளை காட்டி பரபரப்பாகினர். ஆனால் அதில் ஒன்றுமில்லை எனத் தெரிந்ததும் வறுத்தெடுக்க ஆரம்பித்து விட்டனர் நெட்டிசன்கள். தற்போது கஞ்சா கருப்பு, ஓவியா வாக்குவாதம் என்ன என்பது இன்றைய நிகழ்ச்சியில் தெரியவரும்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு