செய்தி விவரங்கள்

பண மோசடி வழக்கில் பவர் ஸ்டார் கைது, மனம் உடைந்து போன தமிழ் ரசிகர்கள்

லத்திகா’, ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் எஸ்.சீனிவாசன் (எ) பவர் ஸ்டார் சீனிவாசன். இவர் சென்னையில் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கிக் கொடுக்கும் தொழிலும் செய்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் இவர் பல தொழில் அதிபர்களிடம்  பல கோடி ரூபாய் பணம் வாங்கி தருவதாக பலரை மோசடி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

அந்த வகையில், கடந்த 2013-ம் ஆண்டு டெல்லியைச் சேர்ந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளருக்கு ரூ.1,000 கோடி கடன் பெற்று தருவதாகக் கூறி, ரூ.10 கோடி மோசடி செய்ததாக பவர் ஸ்டார் சீனிவாசன் மீது புகார் எழுந்தது. இதன் அடிப்படியில் கடந்த மார்ச் மாதம் டெல்லி போலீஸார் சீனிவாசனை கைது செய்தனர்.

அண்மையில் ஜாமீனில் வெளியே வந்த பவர் ஸ்டார் மீது பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மசூர் அலாம் மற்றும் அவரது சகோதரர் சஜ்ஜாத் வஹாப் பெங்களூரு போலீஸாரிடம் பண மோசடி புகார் ஒன்றை அளித்தனர். அதில், “ரூ.30 கோடி கடன் பெற்றுத் தருவதாக கூறி அதற்கு கமிஷன் தொகையாக ரூ.1 கோடியை சீனிவாசன் முன்னதாகவே வாங்கினார். ஆனால் பவர் ஸ்டார்  இது வரை கடன் பெற்றுத் தரவில்லை, மேலும்  கமிஷனாக பெற்ற ரூ.1 கோடியையும் திருப்பித் தரவில்லை'' என குற்றம் சாட்டி  உள்ளனர் .

இதையடுத்து சென்னை வந்த  பெங்களூரு போலீஸார் நேற்று சீனிவாசனை கைது செய்து, பெங்களூரு அழைத்து சென்றனர்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு