செய்தி விவரங்கள்

தல படத்தில் பணியாற்ற காத்திருக்கிறேன்... பிரபல இசையமைப்பாளர்...

தல படத்தில் பணியாற்ற காத்திருக்கிறேன்... பிரபல இசையமைப்பாளர்...
தமிழ் சினிமாவை பொறுத்த வரை ஒவ்வொரு காலகட்டத்தில் ஒரு சில நடிகர்களின் ஆதிக்கம் மிகுதியாய் இருப்பதை பார்க்க முடியும். சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர். எனவும், ரஜினி கமல் எனவும் என இரு மிக பெரும் தூண்களாக அவரவர் காலத்தில் சிறந்து தமிழ் சினிமாவை தாங்கி பிடித்தனர் என கூறலாம். அந்த வகையில் தற்பொழுது தமிழ் சினிமாவின் பெரும் ஜாம்பவான்கள் என்றால் அது தல தளபதியை தான் குறிக்கும். இந்நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் ஆகியோருக்கு இசையமைக்கவேண்டும் என்பது தான் பல இசையமைப்பாளர்களின் ஆசையாகவும் கனவாகவும் இருக்கும்.

தல படத்தில் பணியாற்ற காத்திருக்கிறேன்... பிரபல இசையமைப்பாளர்...
புதிதாகத் திரையுலகிற்கு அறிமுகமாகும் இசையமப்பாளர்களும், தங்களுக்கு முன்னணி நடிகர்களின் படங்களில் வாய்ப்புக் கிடைத்தால் அசத்தி, புகழ்பெற்று விடலாம் என்கிற எண்ணம் இருக்கும்.
ஆனால், பல படங்களில் இசையமைத்திருக்கும் முன்னணி இசையமைப்பாளர்கள் சிலருக்கு கூட அஜித், விஜய் படங்களில் வாய்ப்புகள் எளிதாக கிடைப்பதில்லை. அப்படி தன் ஆசையை முன்னணி இசையமைப்பாளர் ஒருவர் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.

தல படத்தில் பணியாற்ற காத்திருக்கிறேன்... பிரபல இசையமைப்பாளர்...

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல மொழிகளிலும் இசையமைத்துள்ளவர் இசையமைப்பாளர் எஸ்.தமன். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'தல அஜித்துக்கு இசையமைக்க வேண்டும் என்ற ஆசை எனக்கும் உள்ளது. அதற்காக காத்துக்கொண்டிருக்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

தல படத்தில் பணியாற்ற காத்திருக்கிறேன்... பிரபல இசையமைப்பாளர்...
மேலும், தமது ட்விட்டர் பக்கத்தில் சமீப காலமாக பல பிரபலங்களும் தங்களது ஆசைகளை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு