செய்தி விவரங்கள்

தமிழை அழிக்க முயற்சி நடைபெற்று வருகிறது - வைரமுத்து!

தமிழை அழிக்க முயற்சி நடைபெற்று வருவதாக சென்னை காமராஜர் அரங்கத்தில் கவிஞர் வைரமுத்து உரையாற்றியுள்ளார்.

தமிழை அழிக்க முயற்சி நடைபெற்று வருகிறது - வைரமுத்து!

முன்னதாக தனியார் பத்திரிகை ஒன்று நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கவிஞர் வைரமுத்து ஆண்டாள் குறித்து பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு இந்த்துத்துவவாதிகள் மற்றும் பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தமிழை அழிக்க முயற்சி நடைபெற்று வருகிறது - வைரமுத்து!

இந்நிலையில் சென்னை காமராஜர் அரங்கில் மறைமலை அடிகள் குறித்த ஆய்வுக்கட்டுரையை நேற்று கவிஞர் வைரமுத்து அரங்கேற்றம் செய்து பேசினார். அதில், நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக திகழ  தமிழர்களின் நீண்ட நாள் கனவு. வடமாநிலங்களில் இந்தியில் தீர்ப்பு சொல்லும்போது தமிழகத்தில் தமிழில் தீர்ப்பு சொன்னால் ஆகாதா? என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினார்.

மேலும், ''தமிழை அழிக்க முயற்சி நடைபெற்று வருவதாகவும், அதிகார மையங்களில் இருந்து தமிழ் ஆள வேண்டும் எனவும் பேசினார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு